Tuesday 2nd of June 2026

English Tamil
Advertiesment


சிம்பாப்வே அணிக்கு சர்வதேச போட்டிகளில் விளையாட தடை - ஐசிசி


2019-07-19 14864

சிம்பாப்வே கிரிக்கட் அணி சர்வதேச போட்டிகளில் பங்குபற்ற உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் சர்வதேச கிரிக்கட் பேரவை தடை செய்துள்ளது. ஐசிசியினால் சிம்பாப்வே அணிக்கு வழங்கப்படும் நிதியும் இடைநிறுத்தப்பட்டள்ள அதேவேளை, சர்வதேச போட்டிகளில் விளையாடுவதற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள பெண்களுக்காக டி20 உலகக்கிண்ண கிரிக்கட் போட்டியிலும், ஒக்டோபர் மாதம் நடைபெறவுள்ள ஆண்களுக்கான டி20 உலகக்கிண்ண கிரிக்கட் போட்டியிலும் சிம்பாப்வே அணி விளையாட முடியாது என்றும் ஐசிசி அறிவித்துள்ளது.

கடந்த சில நாட்களாக லண்டனில் நடைபெற்ற ஐசிசி கூட்டத்தின் போது இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஐசிசி அரிசியலமைப்பின் பிரிவு 2.4 சி மற்றும் டி ஆகிய பிரிவுகளுக்கு மாற்றமாக செயற்பட்ட காரணத்தினால் விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு ஆணையகத்தினால் (எஸ்ஆர்சி) இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

ஜுன் மாதம் சிம்பாப்வே கிரிக்கட் சபை கலைக்கப்பட்டு உள்ளக விவகாரங்கள் அந்நாட்டு அரசாங்கம் நேரடியாக தலையீடு செய்த காரணத்தினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. எமது அங்கத்தவர்களை உடனடியாக நீக்குவதற்கு நாம் தயாராக இல்லை.

என்றாலும் எமது அங்கத்தவர்கள் அரசியல் தலையீடுகள் இன்றி சுயாதீனமாக செயற்படுபவர்களாக இருக்க வேண்டுமென சர்வதேச கிரிக்கட் பேரவையின் தலைவர் சசன்க் மனோகர் தெரிவித்தார். ஐசிசி அரசியலமைப்பு முரணாக செயற்பட்டதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று தெரிவித்த அவர் சிம்பாப்வே அரசாங்கத்தின் தலையீடுகளை தொடர்ச்சியாக அவதானித்துக் கொண்டிருக்க முடியாது எனவும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.

சிம்பாப்வே கிரிக்கட் அணி சர்வதேச போட்டிகளில் பங்குபற்ற உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் சர்வதேச கிரிக்கட் பேரவை தடை செய்துள்ளது. ஐசிசியினால் சிம்பாப்வே அணிக்கு வழங்கப்படும் நிதியும் இடைநிறுத்தப்பட்டள்ள அதேவேளை, சர்வதேச போட்டிகளில் விளையாடுவதற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள பெண்களுக்காக டி20 உலகக்கிண்ண கிரிக்கட் போட்டியிலும், ஒக்டோபர் மாதம் நடைபெறவுள்ள ஆண்களுக்கான டி20 உலகக்கிண்ண கிரிக்கட் போட்டியிலும் சிம்பாப்வே அணி விளையாட முடியாது என்றும் ஐசிசி அறிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக லண்டனில் நடைபெற்ற ஐசிசி கூட்டத்தின் போது இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஐசிசி அரிசியலமைப்பின் பிரிவு 2.4 சி மற்றும் டி ஆகிய பிரிவுகளுக்கு மாற்றமாக செயற்பட்ட காரணத்தினால் விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு ஆணையகத்தினால் (எஸ்ஆர்சி) இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

ஜுன் மாதம் சிம்பாப்வே கிரிக்கட் சபை கலைக்கப்பட்டு உள்ளக விவகாரங்கள் அந்நாட்டு அரசாங்கம் நேரடியாக தலையீடு செய்த காரணத்தினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. எமது அங்கத்தவர்களை உடனடியாக நீக்குவதற்கு நாம் தயாராக இல்லை. என்றாலும் எமது அங்கத்தவர்கள் அரசியல் தலையீடுகள் இன்றி சுயாதீனமாக செயற்படுபவர்களாக இருக்க வேண்டுமென சர்வதேச கிரிக்கட் பேரவையின் தலைவர் சசன்க் மனோகர் தெரிவித்தார்.

ஐசிசி அரசியலமைப்பு முரணாக செயற்பட்டதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று தெரிவித்த அவர் சிம்பாப்வே அரசாங்கத்தின் தலையீடுகளை தொடர்ச்சியாக அவதானித்துக் கொண்டிருக்க முடியாது எனவும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.

Advertiesment